300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சென்னை : சென்னையில் நடக்க உள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இசையமைப்பாளர் அனிருத், நாளை(ஆக., 23) சென்னை அருகே கூவத்தூரில் 'ஹுக்கும்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை எதிர்த்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ., பனையூர் பாபு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் அனுமதி பெறாமல் இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ளதாகத் தெரிகிறது. அந்த இடத்தைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்காலிக கழிவறைகள், தண்ணீர் வசதி, மருத்துவ வசதி எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல குறுகலான 30 அடி கிராமப்புற சாலை மட்டுமே உள்ளது. மொத்த கூட்டமும் அந்த வழியில் செல்ல முடியாது. மேலும், கிழக்குக் கடற்கரை சாலையை இரண்டு வழிப் பாதையிலிருந்து நான்கு வழிப் பாதையாக மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று(ஆக., 22) மதியம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாளைய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, எம்எல்ஏ பாபுவின் மனுவை நிலுவையில் வைத்துள்ளார். மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல்துறை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வழக்கை ஆக., 28க்கு தள்ளி வைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அந்தப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திய போது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் என மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.