காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா | ‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் |
கிப்ட் என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார் சோனியா அகர்வால். இந்த மாதம் இறுதியில் படம் ரீலீஸாகிறது. படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் போல்டான போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறேன். போலீஸ் ரோல் என்பதால் அதற்கேற்றபடி என்னை தயார்படுத்தி அதை உணர்ந்து நடித்து இருக்கிறேன். யூனிபார்ம் இல்லாத போலீசாக வருகிறேன். பல படங்களில் ஏஞ்சல் ரோலில் நடித்துவிட்டேன். இப்போது மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். அடுத்து ஜட்ஜ், அரசியல்வாதி வேடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறேன்.
நான் காதல் கொண்டேன் படம் பண்ணும்போது, அது சின்ன பட்ஜெட் படம். ஆனால் பெரிதாக வெற்றி பெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். காதல் கொண்டேன் பார்ட் 2 வர பிளான் இருக்குது. அது குறித்து என்னிடம் பேசினார்கள். எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய ஐடியா இருக்குது. இப்போதைக்கு அரசியலுக்கு வர ஐடியா இல்லை. விஜய் கட்சியிலும் சேருவது குறித்து யோசிக்கவில்லை'' என்றார்.