இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் சிதம்பரம். அடுத்து தனுஷை வைத்து படம் இயக்கப்போகிறார். கமலுடன் இணையப்போகிறார் என பேச்சு வந்தது. அது நடக்கவில்லை. இப்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து அந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு பாலன்.
திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பதால் இது மலையாள படம், தமிழிலும் வரும் என தெரிகிறது. யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் ஹிந்தியில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
பாலன் படம் தலைப்புக்கு ஏற்ப அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதை. அதில் நடிப்பவர்கள் புதுமுகங்கள், மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஆவேஷம் படத்தின் கதாசிரியர் ஜீத்து மாதவன் இந்த படத்துக்கும் கதை எழுதியிருக்கிறார்.