அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் |
தமிழ் சினிமாவில் முக்கோண காதல் கதை ஒன்றும் புதிதல்ல. விதவிதமான முக்கோண காதல் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் தொடக்கமாக முற்றிலும் புதுமையாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் 'குங்குமச்சிமிழ்'. பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய படம்.
மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், வி.கோபால கிருஷ்ணன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். கோவையில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மோகன் பஸ்சில் பயணம் செய்யும்போது அதே பஸ்சில் ஓடி வந்து ஏறுகிறார் இளவரசி. யாரோ சிலர் துரத்த அவர்களிடமிருந்து தப்பிக்க பஸ்சில் ஏறி இருக்கிறார். டிக்கெட் எடுக்க அவரிடம் பணம் இல்லை. மோகன் உதவுகிறார். இதுவே அவர்களுக்குள் நட்பாகிறது.
அவருக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கிறார்கள் முடியவில்லை. இதனால் யாரும் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்று இளவரசி விலகி கொள்கிறார்.
மோகன் ஒரு முறை பஸ்சில் பயணிக்கும்போது யாரோ தவறவிட்ட 10 ஆயிரம் ரூபாயை பஸ்சில் கண்டெடுத்து அதன் மூலம் வாழ்க்கையில் உயர்கிறார். அந்த பணம் ரேவதியுடையது. அந்த பணம் தொலைந்ததால் அவரது திருமணமே நின்று விட்டதை அறிகிறார். இதனால் அவர் ரேவதியை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது மீண்டும் இளவரசி வருகிறார். இதன் பிறகு மோகன் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இளையராஜா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 'கூட்ஸ் வண்டியிலே...', 'நிலவு தூங்கும் நேரம்', 'கை வலிக்குது கை வலிக்குது மாமா', 'பூங்காற்றே தீண்டாதே...' என்று எல்லாப் பாடல்களும் ஹிட்டானது.
படம் வெளியாகி இது 40வது ஆண்டு. இதே ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியானது.