மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! |

பாலிவுட்டில் முன்னாள் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரிஷ்மா கபூர். அவருக்கும் தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்து பின் விவாகரத்து பெற்றனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சஞ்சய் மரணம் அடைந்தார். தேனீ ஒன்று அவருடைய வாய் வழியே மூச்சுக்குழாயில் புகுந்ததே மாரடைப்புக்குக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சஞ்சய் கபூரின் உடல் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் சஞ்சயின் உடலுக்கு தனது மகன், மகள், தங்கை கரினா கபூர், இவரது கணவர் நடிகர் சைப் அலிகான் ஆகியோருடன் சென்று கரிஷ்மா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கரிஷ்மாவுக்கு முன்னதாகவே நந்திதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடங்களில் அவரைப் பிரிந்துள்ளார் சஞ்சய். கரிஷ்மாவுடன் 11 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர், மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார்.