பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'.
தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் பான் இந்தியா ரிலீசாக வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் யு டியூபில் வெளியாகி உள்ள டிரைலர்களில் தமிழை விடவும் தெலுங்கு டிரைலரின் பார்வை அதிகமாக உள்ளது. தமிழ் டிரைலர் 3 மில்லியனைக் கடந்துள்ள நிலையில் தெலுங்கு டிரைலர் 4 மில்லியனைக் கடந்துள்ளது.
2 மில்லியன் பார்வைகளை ஹிந்தி டிரைலர் கடந்துள்ள நிலையில் அது யு டியூபில் 'பிளாக்' செய்யப்பட்டுள்ளது. கன்னடம், மலையாளம் டிரைலர்கள் இன்னும் 10 ஆயிரம் பார்வைகளைத் தாண்டவில்லை.
தமிழ்த் திரையுலகில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான 'தக் லைப்' படம் ஏமாற்றிய நிலையில் இந்தப் படத்தை எதிர்பார்த்து திரையுலகினர் காத்திருக்கிறார்கள்.