கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் |
நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்கு பிறகு 'மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதை பணியை மேற்கொண்டு வந்தார் மடோன் அஸ்வின். ஆனால், இந்த படத்தின் திரைக்கதையில் விக்ரம், மடோன் அஸ்வின் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இப்படம் கைவிடப்பட்டது என்கிற தகவல்கள் பரவி வருகிறது .ஆனால், இது குறித்து எந்தவொரு மறுப்பும் படக்குழு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.