நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர்கள் சுனில் நரங், ராம் மோகன் ராவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், “1600 தியேட்டர்களில் குபேரா படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கில் நேரடியாக படமாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்துள்ளோம். உலகிலேயே பணக்கார மனிதன் ஒருவனுக்கும், மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் ஒருவனுக்கும் இடையே நடக்கும் சக்தி வாய்ந்த மோதல்தான் படத்தின் கதை. இயக்குனர் சேகர் கம்முலா இந்தக் கதையை தனுஷிடம் சொன்ன போது 20 நிமிடங்களிலேயே படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும், ரசிகர்களும் புது அனுபவத்தைப் பெறுவார்கள்,” என்று கூறியுள்ளார்கள்.