ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'குட் பேட் அக்லி'க்குபின் அஜித்தை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்குவது முடிவாகிவிட்டதாம். இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முறைப்படி அறிவிப்பு வரும் என்கிறார்கள். பட அறிவிப்புடன், படதலைப்பையும் வெளியிட வேண்டும் என்று அஜித் விரும்புவதால் அதற்கான தீவிர ஆலோசனையில் இயக்குனர் குழு இருக்கிறதாம். சரண், சிறுத்தை சிவா, வினோத் என தனக்கு பிடித்த இயக்குனர்களுடன் மீண்டும் படம் பண்ணி இருக்கிறார் அஜித்.
அந்த வகையில் ஆதிக் உடன் மீண்டும் இணைய உள்ளார். ஆனாலும், இன்னும் சில மாதங்கள் கழித்துதான் படப்பிடிப்பு தொடங்குமாம். கார் ரேஸ் பணிகளை முடித்துவிட்டுதான் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறாராம். அஜித் தவிர, படத்தில் ஜி.வி.பிரகாசும் இசையமைப்பாளராக பணியாற்றுவது நிச்சயமாம்.