ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்த வருடம் நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின் சில மாதங்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலை கருதி, முதலில் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் நடித்து முடித்தார். நாளை வெளியாகவிருந்த அப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள்.
அவர் நடித்து வந்த மற்றொரு படமான 'ஓஜி' படத்தில் எஞ்சியிருந்த காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். ஏறக்குறைய டிராப் என பேசப்பட்ட 'உஸ்தாத் பகத்சிங்' படத்திலும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகி உள்ளது.
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறது. நேற்றைய படப்பிடிப்பு பற்றி தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். இவரும், பவனும் கூட்டணி அமைத்த 'கப்பார் சிங்' தெலுங்குப் படம் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.