படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ் சினிமாவில் சாண்டோ சின்னப்பா தேவருக்குபின், நடிகர் சிவகுமாருக்குபின், நடிகர் யோகிபாபு தீவிர முருகபக்தராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் கேரவனில் உள்ளும், புறமும் அவ்வளவு முருகன் ஓவியங்கள், அறுபடை வீடு முருகனும் அதில் இருக்கிறார். அவர் காரில், வீட்டில் ஏகப்பட்ட முருகன் போட்டோக்கள்.
எந்த ஊர் படப்பிடிப்பு என்றாலும் அருகில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல், எதிர்காலம் குறித்து கஷ்டப்பட்ட காலத்தில் திருத்தணி சென்று முருகனிடம் மனமுருக வேண்டுவாராம். அவர் ஆசையை முருகன் நிறைவேற்ற இப்போது முருகன் மீது அவருக்கு தனிபிரியம், பாசம், பக்தி. யோகிபாபு தனது மகனுக்கு விசாகன், மகளுக்கு பரணி கார்த்திகா என்று முருகன் திருநாமங்களை பெயராக வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது