பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து படம் இயக்கப் போவதாக தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கூறிய மணிரத்னம், அந்த படத்திற்கு சரியான நடிகர்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு படத்தை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் தற்போது சிம்பு நடிக்க இருந்த 49வது படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிம்புவிடத்தில் அந்த கால்சீட்டை வாங்கி அவரை வைத்து தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம், தக் லைப் படங்களில் நடித்த சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.