கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் காதல் கிசுகிசுவில் நீண்ட காலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடுவதில்லை. சுற்றுலா சென்றால் கூட ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்துபவர்கள் இன்னும் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் மறைத்து வருவதன் காரணம் தெரியவில்லை.
ராஷ்மிகா நேற்று பதிவிட்ட சில புகைப்படங்கள் அவர்களது காதல் கிசுகிசுவில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிறப் புடவையில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா, “இந்தப் புகைப்படங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான பெண்மணி, புகைப்படக் கலைஞர், இந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் எனக்கு ஈடு செய்ய முடியாதவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஒரு இரவுக்குள்ளாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அந்த புகைப்படக் கலைஞர் என்பவர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.