அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்குத் திரையுலகத்தில் ஜுன் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக், ஆந்திர அரசு தரப்பிலிருந்து பவன் கல்யாண் சார்பாக எழுந்த விமர்சனத்தால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. 'ஹரிஹர வீரமல்லு' வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.