லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தின் டிரைலர் வெளியான பின் சில சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் வயதான தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன், இளமையான திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி, அபிராமிக்கு கமல்ஹாசன் முத்தம் கொடுக்கும் காட்சிகள் தான் அந்த சர்ச்சைக்குக் காரணம். அதன்பின் வெளியான திரிஷா நடனமாடிய 'சுகர் பேபி' பாடலும் இந்தப் படத்தின் கதையை ஓரளவிற்கு ரசிகர்களுக்குப் புரிய வைத்தது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்னம், “சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை மக்கள் புறக்கணிக்க முயற்சிக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் சற்று வயதானவர்கள், இளமையான ஆண் அல்லது பெண்ணுடன் உறவு வைத்திருப்பார்கள். அது வாழ்க்கையின் உண்மை. அது நீண்ட காலமாக இருக்கிறது, இப்போதும் இருக்கிறது. அதுவே சினிமாவில் வரும் போது, அதில் தவறு கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம், அல்லது அது ஒரு வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது போன்ற உறவுகளை திரையில் பார்க்கும் போது வித்தியாசமாக மதிப்பிடக்கூடாது. கமல் மற்றும் திரிஷாவை அந்தக் கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்க வேண்டும், கமல், திரிஷாவாகப் பார்க்கக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனரும், நடிகர்களும் படம் வெளிவருவதற்கு முன்பு எப்படிப்பட்ட விளக்கங்களையும் கொடுக்கலாம். ஆனால், படம் வெளியான பின் அது மக்களால் எப்படி பார்க்கப்படுகிறது, எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்பதே முக்கியம். அந்த விதத்தில் 'தக் லைப்' படத்தில் இந்த சிக்கலான உறவு குறித்த பார்வை ரசிகர்களிடம் எப்படிப் போய்ச் சேரப் போகிறது என்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.