தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்ற பாடலாசிரியர் நா.முத்துகுமார். ஆயிரக் கணக்கான பாடல்கள், இரண்டு தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள் என சாதனை படைத்தவர். அவரது 50வது பிறந்த நாள் ஜூலை மாதம் வருகிறது. இதை முன்னிட்டு பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது.
அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கிறார்கள். நா.முத்துகுமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். நா.முத்துகுமார் வெல்பர் கோர் கமிட்டி மற்றும் ஏசிடிசி நிறுவனம் இணைந்து இதனை நடத்துகிறது. வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.