300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'கராத்தே கிட்' படம் பெரிய வெற்றி பெற்றது. ஒரு சாதாரண ஆப்ரிக்க சிறுவனை கராத்தே சேம்பியன் ஆக்கும் ஒரு குருவின் கதை. இதில் குருவாக ஜாக்கிசான் நடித்திருந்தார். அதற்கு பிறகு 'கராத்தே கிட்' என்ற பெயரில் ஏராளமான படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாக இருக்கும் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்கிற படம்தான் அதன் நேரடி தொடர்ச்சியான படம்.
இந்த படத்தை ஜோனாதன் என்ட்விஸ்டல் இயக்கி உள்ளார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஜாக்கி சான் மற்றும் ரால்ப் மச்சியோ ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பென் வாங்கை ஜோசுவா ஜாக்சன், சாடி ஸ்டான்லி மற்றும் மிங்-நா வென் ஆகியோரும் நடித்துள்ளனர். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடந்த மே 8ம் தேதி மெக்சிகோ நகரில் திரையிடப்பட்டது, வருகிற 30ம் தேதி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியிடப்படுகிறது.
ஹிந்தி பதிப்பில், ஜாக்கி சான் நடித்த மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கன் குரல் கொடுத்துள்ளார்; அவரது மகன் யுக் தேவ்கன் லி பாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார். நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் 'குங் பூ' மாணவன் லி பாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார், அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத்தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.
அவரது ஆசிரியரான மிஸ்டர் ஹான் (ஜாக்கிசான்) மற்றும் மைதானத்தில் புகழ்பெற்ற டேனியல் லாரூசோ (ரால்ப் மேக்கியோ) ஆகியோரின் வழிகாட்டுதலால், லி பாங் தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் தன்மை, தைரியம் மற்றும் வளர்ச்சி அடையும் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறது இந்த படம். இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.