அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் |
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான். உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். காமெடி கலந்த அவரது சண்டை காட்சிகளுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சீரியசான படங்களிலும் நடித்துள்ளார்.
70 வயதான ஜாக்கிசானின் புதிய தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதில் அவர் தலைமுடி நரைத்து. முகம் சுருங்கி காணப்பட்டார். இதை பார்த்த ஜாக்கிசான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜாக்கி சானுக்கு என்னாச்சு என்று சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் 'அந்த தோற்றம் நான் நடிக்கும் ஒரு படத்திற்கான கெட்-அப்' என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பல நண்பர்கள் எனக்கு எனது 70வது பிறந்த நாளை நினைவூட்டினார்கள். ஒவ்வொரு முறையும் என் வயதை கேட்கும்போது, என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும். அந்த அதிர்ச்சியிலிருந்து 'வயது முதிர்வு என்பது ஓர் அதிர்ஷ்டகரமான விஷயம்' என்று என் சகோதரர் சொல்வதை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வேன்.
சில நாள்களுக்கு முன்பு என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதைப் பார்த்தேன். யாரும் வருந்த வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது. அந்த கேரக்டருக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி, வயதான தோற்றம் வேண்டும். புதிய விஷயங்களை முயற்சி செய்வது எப்போதும் எனக்குப் பிடிக்கும். அப்படி ஒரு புதிய முயற்சிக்கான கெட் அப் அது.
நான் 62 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் மதிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.