ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
கோடை விடுமுறை இன்னும் பத்து நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த வாரம் வெளிவரும் படங்களைப் பார்க்க சினிமா ரசிகர்களுக்குக் கொஞ்ச நேரம் கிடைக்கலாம். அடுத்த வாரம் மே 30ல் குடும்பத்தினர் பலரும் 'பள்ளி திறப்பு' பற்றிய டென்ஷனில் இருப்பார்கள். அதனால், அந்த வாரத்தில் தியேட்டர்கள் பக்கம் போவதை விட கடைகள் பக்கம்தான் அதிகம் போவார்கள்.
அதனாலோ என்னவோ, இந்த வாரம் மே 23ம் தேதி 7 படங்கள் வரை வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்', மறைந்த விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' ஆகிய படங்களுடன், “அக மொழி விழிகள், ஆகக் கடவன, மையல், திருப்பூர் குருவி, ஸ்கூல்' உள்ளிட்ட படங்களும் அன்றைய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு மிகச் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலை தியேட்டர்காரர்களிடம் உள்ளது. கோடை விடுமுறை முடிவுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் எதிர்பார்த்த பெரிய வசூல், லாபம் இந்த மே மாதத்தில் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மே 1ல் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படத்தைத் திரையிட்டவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.