ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் குறைந்த காரணத்தினால் அல்லது பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க பலரும் முன் வராத காரணத்தால் சமீபகாலமாக பல பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனங்கள் தமிழில் படம் தயாரிக்கின்றன. 'வாரிசு, குட் பேட் அக்லி' என பல படங்கள் அப்படி தயாரிக்கப்பட்டவை. இப்போது பல தெலுங்கு இயக்குனர்கள், தமிழ் சினிமா ஹீரோக்களை இயக்குகிறார்கள்.
'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய விவேக், அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல். 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, சூர்யா நடிக்கும் 46வது படத்தை இயக்கப்போகிறார். தனுஷ் நடிக்கும் 'குபேரா'வை இயக்கி வருபவரும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சேகர் கம்முலாதான். விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நடிகர்களான சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் வரலட்சுமி, கஸ்துாரி போன்ற பலரும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார்கள்.