சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கனிகா, மல்லிகா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மலரும் நினைவுகளை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆட்டோகிராப்' படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்ய உள்ளனர். இதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய டிரைலரையும் வெளியிட்டிருந்தனர்.
படம் 2 மணி நேரம் 50 நிமிடம் கொண்டது. தற்போது மறு வெளியீட்டிற்காக படத்தின் 20 நிமிடக் காட்சி குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒலியில் மாற்றம் செய்து, ரீ-வொர்க் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேரன் கூறும்போது "இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி 'ஆட்டோகிராப்' தயார் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு தூரம் சிரமத்தை பார்க்காமல் உழைப்பதற்கு காரணம், இன்றைக்கு இருக்கிற பார்வையாளர்கள் முட்டாள் இல்லை. அவர்கள் புத்திசாலி. அந்த ரசிகனை ஏமாற்றினால், அவனுக்குப் பிடிக்காது. எனவே அவனுக்கான பொறுப்போடு நாமும் படத்தை கொடுக்க வேண்டும்" என்றார்.