அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

ஆர்.பி.டி மணி என்கிற புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் சினிமாவிற்காக கராத்தே மணி ஆனார். 1944ம் ஆண்டு சென்னையில் பிறந்த மணி, சின்ன வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார்.
கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர். கராத்தேவின் உயர்ந்த பட்டமான 'ரென்ஷி' பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். அதோடு டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வந்த மணி ரஜினியின் வேண்டுகோளை ஏற்று 'அன்புக்கு நான் அடிமை' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு 'பில்லா ரங்கா' படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்தார். ரஜினியின் நெருக்கமான நண்பராக மாறினார்.
தொடர்ந்து அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு, அதிசய பிறவிகள், வளர்த்த கடா, தங்ககோப்பை, நீதிக்கு ஒரு பெண் போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள்தான்.
இப்படி வில்லனாக நடிப்பதால் அவரது கராத்தே பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தனது வில்லன் இமேஜ் கராத்தே கலைக்கு இடையூறாக இருப்பதால் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கராத்தே பள்ளிகளில் கவனம் செலுத்தினார்.
ஆனால் திடீரென தனது 50 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல காரணங்கள் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது.