'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

'டைம் டிராவல்' என்பது ஒரு விஞ்ஞான கற்பனை. அதாவது நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பயணிப்பது. இது கற்பனை கருவி என்றாலும் சுவாரஸ்யமானது. இந்த டைம் டிராவலை மையமாக வைத்து ஏராளமான படங்கள் ஹாலிவுட்டில் வெளிவந்திருக்கிறது. தமிழிலும்கூட அவ்வப்போது வந்திருக்கிறது. முக்கியமான படமாக 'இன்று நேற்று நாளை' படத்தை சொல்லலாம்.
ஆனால் 75 வருடங்களுக்கு முன்பே 'இன்பவல்லி' என்ற படத்தில் இந்த டைம் டிராவல் யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காலக் கண்ணாடி இருக்கும், எந்த காலத்துக்கு நாம் செல்ல வேண்டுமே அந்த காலத்தை சொல்லி சில மந்திரங்களை சொன்னால் அந்த கண்ணாடி அந்த காலத்தில் நடந்ததை காட்டும். பிற்காலத்தில் அந்த காலகட்டத்திற்குள் உள்ளே போவது மாதிரியான கதை வளர்ச்சி ஏற்பட்டது. அதன் முன்னோடி இந்த காலக்கண்ணாடி.
இந்த படத்தின் கதை 'ஆயிரத்தோரு இரவுகள்' என்ற அரேபிய நாட்டுபுற கதையை அடிப்படையாக கொண்டது. ஏராளமான மாயாஜால காட்சிகள் கொண்டது. மனிதர்கள் குரங்காய் மாறுவது, மிருகங்கள் மனிதனாக மாறுவது மாதிரியான ஏராளமான மாயாஜால காட்சிகள் இருந்தது. இந்த தந்திர காட்சிகளாலேயே படமும் வெற்றி பெற்றது.
இதில் டி.ஆர். மகாலிங்கம், பி.எஸ்.சரோஜா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், பி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.சுவாமிநாதன், ஈ.ஆர்.சகாதேவன், கே.எஸ். அங்கமுத்து, டி.வி.சேதுராமன், சி.வி.வேலப்பா, பி.சுந்தர் ராவ், ஏ.வி.ராம்குமார், ஆர்.விநாயகம், எஸ்.மேனகா, எம்.டி.கிருஷ்ணா பாய், எம்.லட்சுமணன், எம்.சரோஜா, சேதுலட்சுமி, கே.ஜெயலட்சுமி, பாக்யலட்சுமி, கே.எஸ்.ஹரிஹர ஐயர், 'காக்கா' ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சாமிநாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இன்பவல்லி திரைப்படம், ஷ்யாமல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள ரத்னா ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை வி.பி.ஜக்தாப் கையாண்டார். இதன் இசையை ஜி.ராமநாதன் அமைத்தார். நொட்டானி இயக்கிய படம்.