அஜித் கால்ஷீட் யாருக்கு?: சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் இடையே போட்டி | ரெட்ரோ வெற்றி: 10 கோடி அன்பளிப்பாக கொடுத்த சூர்யா | தமிழில் நடிக்க போட்டிப்போடும் ஸ்ரீலீலா, கயாடு லோஹர் | 'தளபதி' லுக்கில் ரஜினிகாந்த் : ரசிகர்களுக்கு 'கூலி' தந்த குஷி | ''கதை நான் எழுதினாலும் பெயர் வேண்டாம் என்றேன்'': 'மாமன்' சூரி | ஒரே நாளில் மீண்டும் இத்தனை படங்கள்? இதற்கு ஒரு 'என்ட்' கிடையாதா ? | நஷ்டத்திற்காக மீண்டும் நடித்துத் தரும் அஜித் குமார்? | மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் |
பஹல்காம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. இது குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எல்லைகளைப் பாதுகாப்பது பற்றி ஏ,பி, சி தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள். பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவான அல்லது தவறான தகவல் பதிவுககளைப் பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.