என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கடந்த வருடம் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் 'பார்க்கிங்'. இந்த படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்த இவருக்கு தனது இரண்டாவது படமாக சிம்புவை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் சிம்புவின் 49 வது படத்தை இவர் இயக்குகிறார். ஆச்சரியமாக கடந்த 10 வருடத்துக்கு மேலாக ஹீரோவாக நடித்த வரும் நடிகர் சந்தானம் சிம்புவின் நட்புக்காக இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
இந்த கதை குறித்தும் சந்தானத்தின் கதாபாத்திரம் குறித்தும், சமீபத்தில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போது சிம்புவை மனதில் வைத்து தான் எழுதினேன். இதில் அவர் கல்லூரி மாணவராக வருகிறார். ஏற்கனவே மன்மதன், வல்லவன் படங்களில் அவர் கல்லூரி மாணவனாக நடித்தார். அந்த இன்ஸ்பிரேஷன் தான் இப்போதும் அவர் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் செட் ஆவார் என்கிற எண்ணத்தில் தான் இதை எழுதி இருக்கிறேன். இதை அவரிடம் சொல்ல வாய்ப்பு கிடைத்ததும், அது அவருக்கு பிடித்த போய் நடிக்க ஒப்புக்கொண்டதும் கனவு போல தான் இருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். சிம்புவுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அதனால் இந்த படத்தில் வழக்கமான ஒரு காமெடியன் கதாபாத்திரமாக இல்லாமல், கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்கிற அளவில் தான் சந்தானத்தின் கதாபாத்திரம் இருக்கும். ஏற்கனவே அவருடன் 'டிக்கிலோனா' படத்தில் பணியாற்றி இருக்கிறேன். பார்க்கிங் படம் பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டினார். என் மீது வைத்துள்ள அபிப்பிராயத்தில் இந்த கதையைக் கேட்க ஒப்புக்கொண்டவர், இந்த படத்திலும் நடிக்க சம்மதித்தார்” என்று கூறியுள்ளார்.