மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கும் சென்று வழிபடுபவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, இப்போதும் இந்துவாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அதேசமயம் அவ்வப்போது தேவாலயங்களுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பாரிஸில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளார் நயன்தாரா. அந்த தேவாலயத்துக்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்து வருகிறது.




