கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் |
ராமாயணக் கதையை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த படம் 'ஆதிபுருஷ்'. அப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு 'மோஷன் கேப்சரிங்' முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். படத்தின் உருவாக்கம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை.
இந்நிலையில் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த 'சைப் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் தைமூர் படத்தைப் பார்த்த போது உடனே என்னைப் பார்த்தான். நான் என்னை மன்னித்துவிடு என்றேன், அதற்கு பரவாயில்லை என்று பதிலளித்தான் எனக் கூறியிருந்தார்.
தான் நடித்த ஒரு படத்தை இப்போது அப்படிக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் என்ன என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சைப் அலிகானை கடுமையாகக் கிண்டலடித்தனர்.
சர்ச்சை எழுந்ததை அடுத்து சைப் அலிகான், “படத்தில் நான் வில்லனாக நடித்ததுதான் எனது மகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்காகத்தான் நான் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்த முறை ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சொன்னான். நான் நடித்த எல்லா படத்தையுமே விரும்புகிறேன், இந்த 'ஆதிபுருஷ்' உட்பட…,” என விளக்கமளித்துள்ளார்.