கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை சிம்பு நடிக்கும் 49வது பட பூஜை சிம்பிளாக நடந்தது. இந்த படத்தை பாலகிருஷ்ணன் ராம்குமார் இயக்குகிறார். 'டிராகன்' படத்தில் நடித்த கயாடு லோகர் நாயகியாக நடிக்கிறார். பலஆண்டுகளுக்குபின் இதில் சிம்பு உடன் இணைகிறார் சந்தானம். மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ஒளிப்பதிவாளர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இவர் பிரபல பாடகர்கள் திப்பு, ஹரிணி மகன். இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சூர்யா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதில் சிம்புக்கு பிடித்த விடிவி.கணேஷ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. படத்தில் சிம்பு, கல்லுாரி மாணவராக நடிப்பதால், எடை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி', தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' ஆகிய படங்களை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? முதல்வர் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்தவர். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தாரணியை திருமணம் செய்தவர். தாரணியின் தந்தை பிரபல தொழிலதிபர் சி.கே. ரங்கநாதன். இவர் மகன் மனு ரஞ்சித்தைதான், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா காதல் திருமணம் செய்துள்ளார்.