இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் மேக்னாராஜ். கன்னட நடிகையான இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமண செய்து கொண்டார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
சிரஞ்சீவி சார்ஜா இறந்த ஓராண்டிலேயே மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது அவர், நான் எப்போதுமே எனது மகனின் எதிர்காலம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எனது வாழ்க்கையில் இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனபோதும் தற்போது அவரது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் மேக்னாராஜ். அதில், தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீ மட்டுமே கணவர் என்று பதிவிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது மேக்னா ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.