செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாமியாரும், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர் அனில் கபூர் ஆகியோரின் அம்மா நிர்மல் கபூர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று காலை மும்பையில் நடைபெற்றது.
அக்குடும்பத்தின் சினிமா வாரிசுகளான அனில் கபூர், போனி கபூர், அர்ஜுன் கபூர், சோனம் கபூர், ரியா கபூர், ஹரிஸ்வர்தன் கபூர் உள்ளிட்ட பலர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். போனி கபூரின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோரும் ஒன்றாக வந்து தங்களது பாட்டிக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் ஜான்வியின் காதலர் என சொல்லப்படும் ஷிகர் பஹாரியா உடன் வந்தார்.
பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூர் மனைவிதான் நேற்று மறைந்த நிர்மல் கபூர். அவர்களுக்கு போனி கபூர், அனில் கபூர், சஞ்சய் கபூர் ஆகிய மகன்களும், ரீனா கபூர் என்ற மகளும் உள்ளனர்.