இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
தமிழில் நடிக்கும் சில நடிகர்களுக்கு தெலுங்கிலும் ஓரளவிற்கு வியாபாரம் இருக்கிறது. அந்த அளவிற்கு அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்திக்கு அங்கு இருக்கும் ரசிகர்களால் குறிப்பிடத்தக்க வியாபாரம் அவர்களது படங்களுக்கு நடந்து வருகிறது. இருந்தாலும் தெலுங்கில் நேரடியாக எந்த ஒரு படத்திலும் சூர்யா நடித்ததில்லை. தெலுங்கு இயக்குனரான விக்ரம்குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.
2016ல் வெளிவந்த இரு மொழிப் படமான 'ஊபிரி, தோழா' படத்தின் மூலம் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ளார். அதன்பின் கார்த்தி தமிழ் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அடுத்தாக தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். தற்போது நடித்து வரும் தனது 45வது படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்க உள்ள படம் அது. நேற்று முன்தினம் வெளியான 'ஹிட் 3' தெலுங்குப் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் கார்த்தி. அடுத்து 'ஹிட் 4' படத்தில் அவர்தான் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். 'ஹிட் 1, 2, 3' படங்களின் தெலுங்கு இயக்குனரான சைலேஷ் கொலானுதான் படத்தின் இயக்குனர்.
சூர்யா, கார்த்தி நடிக்க உள்ள இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் உருவாகும் எனத் தகவல்.