நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
இந்திய சினிமாவில் வன்முறை சார்ந்த படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. முன்பெல்லாம் ஆபாசமான படங்களுக்குத்தான் அதிகமான 'ஏ' சான்றிதழ் தருவார்கள். சமீப காலங்களில் வன்முறைப் படங்களுக்கும் 'ஏ' சான்றிதழ் தரப்படுகிறது. இருந்தாலும் சில படங்களில் இடம் பெறும் ரத்தம் தெறிக்கும் வன்முறை சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.
ஒருவரைக் கொலை செய்யும் காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றால், கொல்லப்பட்டு இறப்பவரின் முகபாவத்தை மட்டும் காட்டுவார்கள். அதற்கடுத்து அவரை கத்தியார் குத்துவதையோ, துப்பாக்கியால் சுடுவதையோ 'லாங் ஷாட்' ஆகக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் தெறிப்பதையும், துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த பீறிட்டு வருவதையும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
நேற்று முன்தினம் வெளியான நானி நடித்த 'ஹிட் 3' படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தலை வெட்டப்படுவது, கால்கள் வெட்டப்படுவது, உடல்கள் துண்டாவது என பயங்கரமான வன்முறை படத்தில் உள்ளது. 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் அந்தப் படத்தைப் பார்க்க முடியாது. இருந்தாலும் அதற்கு மேற்பட்ட வயதினர் குறிப்பாக இளைஞர்கள் அந்தப் படத்தை அதிகம் பார்ப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் உள்ளது.
கடந்த வருடம் வெளியான மலையாளப் படமான 'மார்க்கோ', 2023 ஹிந்திப் படமான 'அனிமல்' ஆகிய படங்களில் இப்படியாக இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் குறித்து கடும் விமர்சனமும், சர்ச்சையும் எழுந்தது. அதற்குப் பிறகு அதே அளவிலான வன்முறை 'ஹிட் 3' படத்தில் உள்ளது என்பது பரவலான கருத்தாக உள்ளது. ஆனாலும் படத்தின் வசூல் இரண்டு நாளில் 63 கோடியை வசூலித்துள்ளது. இன்று, நாளைய வசூலுடன் சேர்த்து 100 கோடியைக் கடந்து இப்படம் வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள்.
வன்முறையற்ற உணர்வுப்பூர்வமான படங்கள் அடிக்கடி வந்தாலும் அந்த படங்களுக்கு வசூல் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் இப்படியான வன்முறை படங்கள் 900 கோடி(அனிமல்), 120 கோடி(மார்கோ) என வசூலை குவிக்கின்றன. இந்த வரிசையில் ஹிட் 3 படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவிக்க போகிறது.
வன்முறைப் படமாக இருந்தாலும் வசூல் படமாக அமைவதை என்னவென்று சொல்வது ?.