தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நடிகர் சூரியே கதை எழுதி இருக்கிறார். இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
மூன்று நிமிடம் ஓடும் டிரைலரில் கர்ப்பமாக இருக்கும் அக்காவிடம் வயிற்றில் இருக்கும் மகனுக்கு காது முளைத்திருக்கும். நாம் பேசுவதெல்லாம் அவனுக்கு கேட்கும் என்று சொல்லும் சூரி, என்ன பெத்தாரு மாமன் வரேன்டா, இந்த உலகத்துல நீ பார்க்கும் முதல் முகம் இந்த மாமன் முகம்தான். உன்னை நான்தான் குளிப்பாட்டுவேன். பவுடர் போட்டு விடுவேன் என்று பாசத்துடன் கூறும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
அதுமட்டுமின்றி உனக்கு பாசம் காட்ட அப்பா அம்மா, செல்லம் கொடுக்க தாத்தா பாட்டி. அறிவோடு வளர்க்க அழகான அத்தை, மலை போல மாமன் என்று வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் சூரி பேசும் நெகிழ்ச்சியான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. அதன்பிறகு குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் என பாசப் போராட்டத்தை முன்னிறுத்தி சென்டிமெண்ட் கதையில் இப்படம் உருவாகி உள்ளது என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. தற்போது வைரலாகி வருகிறது.