பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பாலிவுட்டில் கடந்த சில வருடங்களில் வெளியான வெப் சீரிஸ்களில் 'பேமிலி மேன்' வெப்சீரிஸின் அடுத்தடுத்த பாகங்கள் ரொம்பவே பிரபலம். ராஜ் மற்றும் டி.கே இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ் தொடர்களில் நடிகை சமந்தா தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர்.
அந்த வகையில் 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸில் நடித்து கவனம் பெற்றவர் வளர்ந்து வரும் நடிகரான ரோஹித் பேஸ்போர் என்பவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கவுஹாத்தி அருகில் உள்ள கர்ப்பங்கா நீர்வீழ்ச்சியில் மதியம் 2 மணி அளவில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் இது குறித்து விரிவான தகவல் அறிக்கை வெளியாகும் என தெரிகிறது.