சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சட்ட விதிகளை மீறியதால் உல்லு, ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
ஓடிடியில் வெளியாகும் படங்கள் வெப்சீரிஸ்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் ஆபாசமான சர்ச்சைக்குரிய படங்கள், வெப்சீரிஸகளையும் வெளியிடுகின்றனர். குறிப்பாக உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது. அந்த புகார் அடிப்படையில் 25 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலிகள் இந்திய சைபர் சட்டங்கள் மற்றும் ஊடக விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஓடிடி தளங்கள் பெயர் விபரம் பின்வருமாறு: உல்லு, ஆல்ட், பிக் ஷாட்ஸ் ஆப், ஜல்வா ஆப், வாவ் என்டர்டெயின்மென்ட், ஹிட் பிரைம், பீனியோ, ஷோ எக்ஸ், சோல் டாக்கீஸ், கங்கன் ஆப், புல் ஆப், அடா டிவி, ஹாட் எக்ஸ், விஐபி, டெசிப்ளிக்ஸ், பூமெக்ஸ், நவசர லைட், குலாப் ஆப், புகி, மோஜ்ப்ளிக்ஸ், ஹல்ச்சுல் ஆப், மூட்எக்ஸ், நியான்எக்ஸ் விஐபி, ட்ரிப்லிக்ஸ்.