எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இந்த படம் அரசியல் கதையில் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், விஜய் பிறந்தநாளில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், அவர் போலீசாக தோன்றினார்.
இந்நிலையில் ஜனநாயகன் படக்குழு வட்டாரத்தில் விசாரித்தபோது, இப்படம் அரசியல் கதைகளத்தில் உருவாகவில்லை. ஆனால் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான போலீசாக விஜய் நடித்திருக்கிறாராம். அதோடு தேர்தல் நேரங்களில் நடக்கும் பிரச்சாரத்தின் போது மக்களை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் குழப்புகிறார்கள், வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை திசை திருப்புவது போன்ற விஷயங்களில் ஏற்படும் சலசலப்பின் போது ஒரு போலீசாக விஜய் தலையிட்டு அதை தடுத்து நிறுத்துகிறாராம். அதோடு மக்களுக்கு சில அட்வைஸ் கொடுப்பது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.
அந்த வகையில் ஜனநாயகன் படத்தில் உண்மையான ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் தலைவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை சொல்லக்கூடிய முக்கியத்துவமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து தான் மக்களுக்கு அட்வைஸ் கொடுப்பதை விட, ஒரு திரைப்படத்தின் மூலம் அந்த கருத்துக்களை சொல்லும்போது மக்களை எளிதில் போய் சேரும் என்பதினால் இந்த ஜனநாயகன் படத்தில் அது போன்ற பல காட்சிகளில் விஜய் நடித்திருப்பதாக கூறுகிறார்கள்.