மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
கோடை விடுமுறையின் முக்கியமான கால கட்டம் மே மாதம். குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சுற்றுலா, உள்ளூர் சுற்றுலா என சுற்றிக் கொண்டிருப்பார்கள். உள்ளூர் சுற்றுலாவில் உறவினர்களுடன் சினிமா தியேட்டர்களுக்குச் செல்வதும் இருக்கும். கோடை விடுமுறையில் படங்களை வெளியிடும் வாய்ப்பு சிலருக்கே கிடைக்கம்.
இந்த மே 1ம் தேதி தமிழில் இரண்டு படங்கள் முக்கியமாக வெளியாகின்றன. இரண்டு படத்திற்குமே திரையுலக வட்டாரங்களில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இரண்டு படமுமே நிச்சயம் தப்பு செய்யாது என்பதுதான் கோலிவுட்டின் பேச்சாக உள்ளது. ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி என ஆங்கிலத் தலைப்புடன் வரும் படங்கள்தான் அந்தப் படங்கள்.
ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறையாகக் கூட்டணி சேர்ந்த படம். த்ரில்லர் படங்கள், ஆக்ஷன் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், படத்தில் ரொமான்ஸ் அதிகமாக இருக்கும், அதுதான் படத்தின் மையம் என்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
சூர்யாவுக்கு இந்தப் படத்தின் வெற்றி மிகவும் அவசியமானது. அவர் கடைசியாக நடித்து வெளிவந்த சரித்திர பிரம்மாண்டப் படமான 'கங்குவா' சரியாகப் போகவில்லை. அதனால், இந்தப் படத்தின் வரவேற்பையும், வெற்றியையும் அவர் அதிகமாகவே எதிர்பார்க்கிறார். தன் அழகால் வசீகரிக்கும் பூஜா ஹெக்டே, இந்தப் படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கெனவே 'கனிமா' பாடல் மூலம் தனது நடனத்தால் பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர், தமிழில் ஒரு தடத்தைப் பதிக்க வாய்ப்புள்ளது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே வரவேற்பைப் பெற்று 'வைப்' செய்ய வைத்துவிட்டது.
90களில் நடக்கும் கதை, அந்தக் காலத்தைக் கண்முன் கொண்டு வருவதில் மற்ற கலைஞர்களும் உழைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்வார்கள் என நம்பலாம்.
டூரிஸ்ட் பேமிலி
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தமிழகத்தில் அடைக்கலமாகி உள்ள ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய ஒரு படம். சசிகுமார், சிம்ரன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். படத்தின் அறிமுக இயக்குனர் அபிஷன் 23 வயதில் இந்தக் கதையைத் தயாரிப்பாளரிடம் சொல்லி அசத்தி பட வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்த வயதுக்கு மீறிய ஒரு 'மெச்சூரிட்டி'யுடன் இந்தப் படத்தை அபிஷன் இயக்கியுள்ளதாக படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
தமிழ் சினிமா ஹீரோக்கள் பக்கமே சுற்றிக் கொண்டிருக்கிறது. வருடத்திற்கு ஒரு சில படங்கள் மட்டுமே கதையம்சம் உள்ள படங்களாக வந்து வரவேற்பைப் பெறுகின்றன. இந்தப் படம் அப்படியான ஒரு கதையம்சம் கொண்ட படம் என்கிறார்கள். படத்தின் முன்னோட்டம் வெளியான போதே திரையுலகத்தில் இப்படம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவே படத்தின் வரவேற்புக்கும், வியாபாரத்திற்கும் பெரிய ஆதரவைத் தந்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறிப்பிடும்படி இருக்கும் என்கிறார்கள். ஒரு பக்கம் சூர்யாவின் 'ரெட்ரோ' போட்டியில் இருந்தாலும், இந்தப் படமும் ரசிகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.
ஹிட் 3
மேலே குறிப்பிட்ட, இரண்டு நேரடித் தமிழ்ப் படங்கள் போட்டியில் இருந்தாலும் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வெளியாகும் 'ஹிட் 3' படமும் போட்டியைத் தரலாம். ஓடிடி தளங்கள் மூலம் தனது தெலுங்குப் படங்களைத் தமிழ் பேச வைத்து இங்குள்ள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நானி. 'வெப்பம், நான் ஈ' என நேரடி தமிழ்ப் படங்களில் நடித்தவர்.
'ஹிட் 1, ஹிட் 2' ஆகிய இரண்டு படங்கள் தெலுங்குப் படங்கள் என்றாலும், தமிழில் டப்பிங் ஆகி ஓடிடி தளத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அவ்வளவு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படங்களாக அவை அமைந்தன. இந்த 'ஹிட் 3' படத்தில் நானி கதாநாயகன் என்பது கூடுதல் படம். 'கேஜிஎப், கோப்ரா' படங்களில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தின் கதாநாயகி.
தெலுங்கில் இந்த 'ஹிட் 3' டிரைலர் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிரைலரை விடவும் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்றது. அதனால், இந்தப் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
சூர்யாவின் 'ரெட்ரோ' படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. அங்கு 'ஹிட் 3' படத்தின் போட்டியையும் அந்தப் படம் சமாளித்தாக வேண்டும். நானியின் தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியாகி பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது இல்லை. ஹிட் 3, அதை மாற்றியமைக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.