நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா? | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு |
‛கங்குவா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரெட்ரோ படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரெட்ரோ கதையை உருவாக்கினேன். இந்த கதை எழுதும்போது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாகதான் இருந்தது. ஆனால் அதையடுத்து சூர்யா கால்ஷீட் கிடைத்ததால் ரஜினிக்கு எழுதிய அதே கதையில் காதலை கலந்து ரெட்ரோவாக உருவாக்கினேன்'' என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.