போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த ‛தேவரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தற்போது ராம் சரண் நடிக்கும் ‛பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வரப்போகிறார் பா.ரஞ்சித். அடுத்தபடியாக, அட்டகத்தி தினேஷை நாயகனாக வைத்து தான் இயக்கும் படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கப்போவதாக கூறி வந்த இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனால் விரைவில் தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாகப் போகிறார் ஜான்வி கபூர்.