தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்குவார் என்றுதான் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இணைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கூலி படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். ‛மதராஸி' படத்தை அடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ‛3' என்ற படத்தில்தான் தனுஷின் நண்பனாக காமெடி ரோலில் சிவகார்த்திகேயன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.