ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் கடந்த 2016ம் வருடம் வெளியான படம் ஒப்பம். இந்த படத்தில் மோகன்லால் படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் பணிபுரியும் வசதியான செல்வந்தர் வீட்டில் அனைவரும் பழைய பகை காரணமாக வில்லனால் ஒவ்வொருவராக பழிவாங்கப்பட, மீதி எஞ்சி இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற கண் தெரியாத மோகன்லால் போராடுவதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்தார். விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வெளியாகி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷனே இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். வில்லனாக பாபி தியோல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது, ஒருவேளை அந்த படத்தை முடித்துவிட்டு இதை இயக்குகிறாரா என்பது குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.




