சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலையும் மாற்றம் செய்து விஷமிகள் யாரோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ ரம்யா சுப்பிரமணியத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛என்னுடைய வீடியோவை ஏஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும். சட்டத்துக்கு புறம்பாக என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறி இதுபோன்று செய்வது மோசடியான செயலாகும். இதை இனிமேலும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.




