ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? |
யு டியுப், இணைய, சமூக வலைத்தளங்கள் மிக அதிகமாகப் பரவிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு படம் வெளிவந்த உடனேயே அதற்கான விமர்சனங்களும் வந்துவிடுகின்றன. சிலரோ இடைவேளை வரையில் கூட தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுத்தும், சிலர் அதுவரையிலும் கூட பார்த்த படத்தை விமர்சனமாக எழுதுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியான விமர்சனங்களைத் தடுக்க வேண்டுமென அனைத்துத் திரையுலகத்திலும் அவ்வப்போது குரல் எழும்பும், பின்னர் அது காணாமல் போய்விடும்.
தெலுங்குத் திரையுலகத்தின் திறமையான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட நானி, விமர்சனங்கள் பற்றிய தனது கருத்து, ஆலோசனையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“முன்பெல்லாம் உடனுக்குடன் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த ஒரு தளமும் இல்லை. ஆனால், இப்போது சோஷியல் மீடியா வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் தடுக்க முடியுமா? ஏன் தடுக்க வேண்டும் ?.
ஒரு புதிய படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்று சொல்லும் வரை ஓகே தான். அதேசமயம் ஒரு படத்தின் முதல் காலை காட்சி முடிந்ததுமே படம் 'பிளாப்' என்று விமர்சகர்கள் அறிவிக்கக் கூடாது. ஒரு பத்து நாட்கள் கழித்து படம் 'பிளாப்' என்றால் அது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் விமர்சகர்களின் வரவேற்பை எப்போதும் பெறுவது வழக்கம். படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தால் கூட அவரது படத்தில் ஏதோ ஒன்று இருக்கும் என்று பாராட்டுக்களைப் பெறுபவர்.
தற்போதைய விமர்சனங்கள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் செய்யும் போட்டி, பொறாமையால் மட்டுமே வருகிறது என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக உள்ளது. அதை சம்பந்தப்பட்ட நடிகர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது நடக்காத ஒன்று.