இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
தமிழ்த் திரைப்படங்களின் முதல் நகைச்சுவை நடிகையாக கருதப்படுகிறவர் அங்கமுத்து. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1914ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கமுத்துவிற்கு 5 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.
தஞ்சை கோவிந்தன் கம்பெனியில் சேர்ந்த அங்கமுத்து, நாடகங்களில் நடித்தார். சில ஆண்டுகள் கழித்து பி.எஸ்.ரத்னபாய் - பி. எஸ்.சரஸ்வதிபாய் சகோதரிகள் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் இணைந்தார். எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராக பாகவதர், கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களுடன் நடித்ததால் பிரபலமானார்.
மருமகள், காவேரி, எதிர்பாராதது, மந்திரி குமாரி, புகுந்த வீடு, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டவுன் பஸ், பொண்ணு மாப்பிள்ளை, தெய்வப்பிறவி, வீட்டுக்கு வந்த மருமகள் உள்ளிட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பராசக்தியில் (1952) , மந்திரிகுமாரி (1950), தங்க மலை ரகசியம் (1957), மதுரை வீரன் (1960) களத்தூர் கண்ணம்மா (1960) போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். அவர் கடைசியாக நடித்த படம் ரஜினிகாந்தின் 'குப்பத்து ராஜா' (1979).
கார்கள் புழக்கத்தில் இருந்த அந்த காலத்தில் படப்பிடிப்புக்கு வில்லு மாட்டு வண்டியில்தான் படப்பிடிப்புக்கு செல்வார். தயாரிப்பாளர் கார் அனுப்பினாலும் அதில் பயணக்க மாட்டார். ஒரு கட்டத்தில் மாட்டு வண்டிகள் சென்னையில் தடை செய்யப்பட்டதும், ரிக்ஷாவில் படப்பிடிப்புக்கு சென்று வந்தார். அந்த காலத்திலேயே அதிக சம்பளம் பெறும் காமெடி நடிகையாக இருந்தாலும் எளிமையாக வாழ்ந்தார்.
இரக்க குணம் மிக்க அங்கமுத்து தன் வருமானத்தை மற்றவர்களுக்கு வாரிக்கொடுத்தார். கடன் கேட்டவர்களுக்கு பணத்தை கொடுப்பார். ஆனால் அதனை அவர் திருப்பி கேட்பதில்லை. இதனால் தனது கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருக்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை கொடுத்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாத அங்கமுத்து 1994ம் ஆண்டு காலமானார்.