'வா வாத்தியார்' என எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் வாத்தியார் வரமாட்டார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன் பிறகு படப்பிடிப்பை ஆரம்பித்து கடந்த வருடம் மே மாதம் படத்தின் தலைப்பையும் அறிவித்தார்கள்.
'சூது கவ்வும், காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமிக்கு ஏழு வருடங்களுக்குப் பிறகு படம் இயக்கக் கிடைத்த வாய்ப்பு. படபடவென படப்பிடிப்பை முடிக்காமல் இழுத்துக் கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு. இன்னும் 20 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்த வேண்டி இருக்கிறதாம். ஆனால், தயாரிப்பாளரோ இன்னும் எதற்கு இத்தனை நாள் என கேள்வி கேட்கிறாராம்.
கார்த்தியும் 'சர்தார் 2' படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி அதை முடிப்பதில் தீவிரமாக இருந்தாராம். அதனால், 'வா வாத்தியார்' இப்போதைக்கு வர மாட்டார் என்கிறார்கள். அதற்கு முன்னதாக 'சர்தார் 2' வருவது உறுதி என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.