சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த வருடம் பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்கிற காரணத்திற்காக இந்த கொலையை அவர் செய்தார் என போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தர்ஷன் மட்டுமல்லாது பவித்ரா கவுடா மற்றும் இந்தக் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட இன்னும் 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் ஜாமீனில் இவர்கள் அனைவருமே வெளிவந்தனர். நடிகர் தர்ஷன் பெங்களூரு கூட செல்லாமல் ஏற்கனவே பிரிந்திருந்த தனது மனைவி விஜயலட்சுமியுடன் சேர்ந்து மைசூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.
அதன்பிறகு இந்த நிகழ்வு காரணமாக கிட்டத்தட்ட அவர் தனது காதலி பவித்ரா கவுடாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்றே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவின் டீன் ஏஜ் மகளான குஷியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தர்ஷன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் அவர் குஷியுடன் கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை நடிகை பவித்ரா கவுடாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தர்ஷனின் ரசிகர்களிடம் மட்டுமல்ல கன்னட திரை உலகிலும் மீண்டும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தைம் ஏற்படுத்தி உள்ளது.