ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நகைச்சுவை நிகழ்ச்சியில் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்தவர் ஆண்டனி. சந்தானம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்ததும், 'தம்பிக் கோட்டை' உள்ளிட்ட சில படங்களில் சந்தானத்தின் நண்பராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சந்தானம் மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் சிலர் உதவினர். உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று (ஏப்.,9) காலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.