சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
கடந்த 2000ம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. இந்தப்படம் அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இந்த வரிசையில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை வருகின்ற மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான ரீ மாஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.