பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு |

கடந்த 2016ம் ஆண்டு சந்தானம் நடித்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. அதன்பிறகு 2019ம் ஆண்டு வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. பின்னர் 2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானம் நடித்தார். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்து வந்தார் சந்தானம்.
இப்படத்தில் அவருடன் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏற்கனவே இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வருகின்ற மே 16ம் தேதி அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர்.