முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

மம்முட்டி நடிப்பில் அதிரடி போலீஸ் ஆக்சன் படமாக உருவான 'உண்ட' என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் காலித் ரஹ்மான். அதன் பிறகு டொவினோ தாமஸ் நடித்த இன்னொரு அடிதடி ஆக்சன் படமான தள்ளுமால என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் அடுத்ததாக தற்போது குத்துச்சண்டை பின்னணியில் ஆலப்புழா ஜிம்கானா என்கிற படத்தை இயக்கியுள்ளார் காலித் ரஹ்மான். கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிரேமலு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் அடுத்ததாக கதாநாயகனாக நடித்துள்ள படம் இது. கதாநாயகியாக அனகா ரவி நடித்துள்ளார்.
இந்தப் படம் நாளை (ஏப்-10) வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஆலப்புழா ஜிம்கானா படக்குழுவிற்கு கிடைத்தது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழுவினர் படத்தின் டிரைலரை அவருக்கு போட்டுக் காட்டினார்கள். படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு ரொம்பவே இம்ப்ரஸ் ஆன சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.